Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் நாமினேட் ஆனார்கள் என்று தெரியுமா.?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் நாமினேட் ஆனார்கள் என்று தெரியுமா.?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் நாமினேட் ஆனார்கள் என்று தெரியுமா.?

Amritha JBy : Amritha J

  |  28 Dec 2020 5:43 PM GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில் ஐந்திற்கு அதிகமாக போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அந்த வகையில் இன்று ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. இன்றைய முதல் புரமோவில் போட்டியாளர்கள் இரண்டு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்கின்றனர். வீட்டின் தலைவர் ஆரியை நாமினேஷன் செய்யக்கூடாது என்று பிக்பாஸ் அறிவிக்கும்போது ச்சே என்ற ஒரு குரல் கேட்கிறது.

அப்போது பாலாஜியும் ஒரு காமெடியை சொல்கிறார். இந்த நிலையில் ஆஜித் மற்றும் கேபி ஆகிய இருவரையும் ரம்யா நாமினேட் செய்து விட்டு இருவரும் இன்வால்மெண்ட் குறைவாக இருப்பதாக கூறுகிறார். இதனை அடுத்து ரம்யாவை நாமினேட் செய்யும் ரியோ, அவர் தன்னுடைய எதிர்க்கட்சி என்று கூறுகிறார். இதனை அடுத்து ஆஜித் மற்றும் ஷிவானி ஆகிய இருவரையும் நாமினேட் செய்யும் சோம், இருவரும் தங்களுடைய திறமைகளை இன்னும் வெளிக்காட்டவில்லை என்று கூறுகிறார்.


ஆஜித் மற்றும் ஷிவானி ஆகிய இருவரையும் நாமினேட் செய்யும் கேபி, ஆஜித்தை முதல் முறையாக நாமினேட் செய்வதாகவும், இருவரும் என்ன யோசிக்கிறார்கள் என்றே எனக்கு தெரியவில்லை என்று கூறுகிறார். அதன் பிறகு வரும் ஷிவானி, ஆஜித் மற்றும் கேபியை நாமினேட் செய்கிறார். இந்த ப்ரோமோவில் இருந்து ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி ஆகிய மூவரும் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான கவனம் என்று நினைத்தால் காண்போம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News