பிக்பாஸ் கயிறு டாஸ்க்கில் யார் வெற்றி பெற்றார் தெரியுமா!
பிக்பாஸ் கயிறு டாஸ்க்கில் யார் வெற்றி பெற்றார் தெரியுமா!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 97-வது நாட்கள் நடைபெறும் நிலையில் நேற்று கயிறு டாஸ்க் நடந்தது என்பதும் இதில் கடைசி நேரத்தில் ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்கு பிடித்தனர் என்பதும் இவர்களில் யார் வெற்றி பெற்றார்கள் என்ற முடிவு தெரியாமலேயே நேற்றைய நிகழ்ச்சி முடிவு பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த டாஸ்க்கில் ஷிவானி வெற்றி பெற்றதாக தெரிகிறது.
இந்த டாஸ்க்கில் ஷிவானி 4 மணி நேரம் 48 நிமிடங்கள் தாக்குப்பிடித்து உள்ளார் என்றும், இதனை அடுத்து அவருக்கு 7 புள்ளிகள் கிடைத்துள்ளது என்பதும், ஏற்கனவே 32 புள்ளிகள் பெற்றுள்ள ஷிவானிக்கு தற்போது 39 புள்ளிகள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் கயிறு டாஸ்க்கின் புள்ளிகளை சேர்க்காமல் 39 புள்ளிகள் பெற்று சோம் ஒட்டுமொத்தமாக அனைத்து சுற்றுகளிலும் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல் வந்திருக்கும் நிலையில் வெளியேறும் நாளில் அவர் சிறப்பாக செயல்பட்டு நல்ல முயற்சி எடுத்து செய்துள்ளார் என்ற பாராட்டுக்களுடன் கிளம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் 19 வயதே ஆன ஒரு இளம் பெண், மைண்ட் கேம் உள்ள ஒரு போட்டியில் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக விளையாடி 90-க்கும் அதிகமான நாட்கள் தாக்குப் பிடித்து உள்ளார் என்பதும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதுபற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.