ஏன் திரையரங்கிற்கு மக்கள் வருவது இல்லை தெரியுமா? - மாதவன் கூறிய விளக்கம்
'திரையரங்குகளில் சரியான உட்கட்டமைப்பு வசதி இல்லாத காரணமே திரையரங்கிற்கு மக்கள் வருவது குறைந்துள்ளது' என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

'திரையரங்குகளில் சரியான உட்கட்டமைப்பு வசதி இல்லாத காரணமே திரையரங்கிற்கு மக்கள் வருவது குறைந்துள்ளது' என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
தற்பொழுது மாதவன் ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க அவரிடம் திரையரங்கங்கள் மூடல் மற்றும் ஹிந்தி படங்கள் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, 'திரையரங்கங்கள் மூடப்படுவதற்கு படங்கள் நன்றாக இல்லை என்பதாலும் மக்கள் வருகை குறைவு என்பதால் இல்லை. இங்கு பெரும்பாலான திரையரங்குகளில் சரியான உட்கட்டமைப்பு வசதி இல்லை இன்னும் பழைய நிலைமையிலே உள்ளன. மக்களின் ரசனை, வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது சரியான உட்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் திரையரங்கிற்கு செல்வது குறைந்துள்ளது' என கூறியுள்ளார்.
மேலும் அவர் படம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரவளிப்பார்கள் இதில் எந்த ஒரு மொழி பாகுபாடும் கிடையாது எனவும் தெரிவித்தார்.