Kathir News
Begin typing your search above and press return to search.

நக்சைலைட்டுகளை ஆதரிக்கிறாரா வைரமுத்து.. அருந்ததி புத்தகம் பற்றி என்ன கூறுகிறார்.?

நக்சைலைட்டுகளை ஆதரிக்கிறாரா வைரமுத்து.. அருந்ததி புத்தகம் பற்றி என்ன கூறுகிறார்.?

நக்சைலைட்டுகளை ஆதரிக்கிறாரா வைரமுத்து.. அருந்ததி புத்தகம் பற்றி என்ன கூறுகிறார்.?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Nov 2020 12:32 PM GMT

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அருந்ததி ராய் புத்தகம் என்பதில் நக்சைலைட்டுகள் பற்றி இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்த புத்தகத்தில் இருந்த குறிப்பு நீக்கப்படுவதாக துணைவேந்தர் கூறியிருந்தார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பி.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பில் பத்திரிக்கையாளர் அருந்ததிராய் எழுதிய என்ற புத்தகம் பாடமாக இருந்த்து. ஆனால் இந்த புத்தகத்தில் நக்சலைட்டுகள் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அடுத்து அந்த குறிப்பிட்ட பாடம் நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அருந்ததிராய் பாடத்தை நீக்கியதற்கு திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து வைரமுத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் இது குறித்து கூறியதாவது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால்.. காற்றின் வீச்சு நிற்பதில்லை.. என்று பதிவிட்டுள்ளார். இவர் இது போன்ற பதிவுகளால் நக்சைலைட்டுகளை ஆதரிக்கிறாரா என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News