இடைஞ்சலா இருக்கு! கோயிலை குடும்பத்துடன் சேர்ந்து இடித்து தள்ளிய நடிகர் விமல்!
இடைஞ்சலா இருக்கு! கோயிலை குடும்பத்துடன் சேர்ந்து இடித்து தள்ளிய நடிகர் விமல்!
By : Kathir Webdesk
களவானி என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமல். இதன் பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் கிராமத்து கதை என்றால் விமல் அப்படியே செட் ஆகிடுவார் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னாங்கொம்பு தெற்கு மந்தை என்ற இடத்தில் நடிகர் விமலின் வீடு உள்ளது. அவர் வீட்டுக்கு முன்பு காலி இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து கருப்பசாமிக்கு கோயில் ஒன்றை கட்டி வழிப்பட்டு வந்துள்ளனர்.
இதற்கு நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் வீட்டுக்கு முன்பு கோயில் இருப்பது இடைஞ்சலா இருக்கிறது. எனவே கோயிலை இடித்து தள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு நேரங்களில் குடும்பத்துடன் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கோயிலை இடித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கோயிலின் வேல் மற்றும் உண்டியல் போன்ற பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நடிகரா இருந்து கொண்டு இப்படி செய்வது சரியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.