எல்லாவற்றையும் தொழிலாக பார்க்காதீர்கள்.. கமலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்.!
எல்லாவற்றையும் தொழிலாக பார்க்காதீர்கள்.. கமலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்.!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கமல் சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றுவது உள்ளிட்ட 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.
இந்நிலையில், கமல் திட்டத்தை பாராட்டி காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தனது ட்விட்டர் பதிவில், இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளைச் சம்பளம் பெறத்தக்க பணியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கமலின் எண்ணத்தை நான் வரவேற்கிறேன். என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை கங்கனா ரணாவத், சசிதரூரின் ட்விட்டை மேற்கோள் காட்டி பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், எங்கள் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் செய்யும் உறவுக்கு ஒரு விலை அட்டையை ஒட்டாதீர்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்குச் சம்பளம் வேண்டாம்.
எங்களுக்கே உரித்தான ஒரு குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக இருக்க எங்களுக்கு சம்பளம் வேண்டாம். எல்லாவற்றையும் தொழிலாக பார்க்காதீர்கள்.
மாறாக உங்கள் மனைவியிடம் நேசிக்கும் பெண்ணிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். பெண்களுக்குத் தேவை நீங்கள் கொடுக்கும் மரியாதையும், பகிரும் அன்பும்தான். சம்பளம் அல்ல. இவ்வாறு கூறியுள்ளார்.