Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ் பட இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!

சமீபத்தில் வெளியான தனுஷ் படமான வாத்தி படத்தை இயக்கிய இயக்குனருடன் இணைந்து துல்கர் சல்மான் படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் பட இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!

KarthigaBy : Karthiga

  |  17 April 2023 8:15 AM GMT

நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார் . கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதாராமம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் துல்கர் சல்மான்.


இந்த படத்தை சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். மேலும் இந்த படத்தை சித்தாரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெங்கி அட்லூரி படத்தை இந்நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News