துவங்கிய தெலுங்கு 'லூசிபர்' - மகிழ்ச்சியுடன் அப்டேட் குடுத்த இசையமைப்பாளர் தமன் !
Music Director Thaman opens up.
By : Mohan Raj
மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'லூசிபர்' படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. இதில் அரசியலில் ஈடுபடும் 'டான்' கதாபாத்திரத்தில் மோகன்லால் அருமையாக நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்குனர் மோகன்ராஜா நடிகர் சிரஞ்சீவி'யை வைத்து இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் அப்டேட் கொடுத்துள்ளார்.
"வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். சிரஞ்சீவியின் 153வது படத்திற்கு ஒரு பாடலை நிறைவு செய்துள்ளோம். சிரஞ்சீவி சார் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பெரிய ரசிகனாக எனக்கு இது மிக சிறப்பான ஒன்று. நாளை படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. எங்கள் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு வாழ்த்துகள்" என அப்டேட் கொடுத்துள்ளார்.