திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பால் பணிந்த ஈஸ்வரன் படக்குழு.!
திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பால் பணிந்த ஈஸ்வரன் படக்குழு.!

தமிழகம் முழுவதும் வருகின்ற வருகின்ற 14ம் தேதி திரையரங்கில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதே சமயம் இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நிதிஅகர்வால் நடித்துள்ளனர். இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவை தவிர்த்து வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் வெளியிட்டால் ஈஸ்வரன் படத்தை தமிழகத்தில் வெளியிடமாட்டோம் என்று கூறினர். திரையரங்க உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு நிறுத்தியுள்ளது.