Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்த பிரபல நடிகர்.!

நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்த பிரபல நடிகர்.!

நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்த பிரபல நடிகர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2020 11:39 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சூரியின் அப்பாவாக தவசியின் ‘‘கருப்பன் குசும்புக்காரன்’’ காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். கருப்பன் குசும்புக்காரன் மீம்கள் இணையத்தில் வைரலாகி வரும். இதில் அவரது முகம் அனைவருக்கும் அத்துபடி என்றே சொல்லலாம்.

சமீபகாலமாக அவருக்கு உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட தவசி, பணம் உதவி வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு அதே மருத்துவமனையில் தற்போது இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அம்மருத்துவமனையின் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ரூ.10 ஆயிரமும் நிதியுதவி செய்துள்ளார். ஏற்கனவே நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சூரியும் ரூ.20 ஆயிரம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News