அமிதாப்பச்சனுடன் அப்பா - மகள் சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை!
அமிதாப்பச்சனுடன் அப்பா - மகள் சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சில நாட்களுக்கு முன்பு மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த 'சரிலெரு நீகேவரு' என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் அதனை தொடர்ந்து அவர் தற்போது அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா' என்ற படத்திலும் சர்வானந்த் உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கார்த்தியுடன் தமிழில் இவர் நடித்த 'சுல்தான்' விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து இந்தியா முழுவதும் வைரலானது.தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவரது மகளாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பதும் அப்பா-மகள் பற்றிய சென்டிமென்ட் கதையம்சத்துடன் கூடிய இந்த படத்தில் நீனா குப்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகி என்றும் அதேபோல் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
