சிறிய உணவகத்துக்கு கணவருடன் சென்ற பிரபல நடிகை: வைரல் புகைப்படம்.!
சிறிய உணவகத்துக்கு கணவருடன் சென்ற பிரபல நடிகை: வைரல் புகைப்படம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஒரு சிறிய உணவகத்தில் அமர்ந்து கணவரோடு உணவருந்துவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த பதிவில் இந்த புகைப்படங்கள் குறித்து அவர் கூறியுள்ளது: சாந்தி மெஸ்ஸில் சாந்தி அக்காவும் பாலகுமார் அண்ணனும் உணவோடு சேர்த்து அன்பையும் மிக அதிகமாக பரிமாறினார்கள். அதனால்தான் இந்த மெஸ் 27 ஆண்டுகளாக இங்கு உணவு சுவையாக இருக்கிறது. நான் இந்த சிறிய உணவகத்துக்கு 9 வருடங்களாக வந்து செல்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

காஜலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பெரிய பிரபல நடிகை ஒரு சிறிய உணவகத்தில் உணவு அருந்துவீர்களா என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது காஜல் அகர்வால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.