Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!
X

Amritha JBy : Amritha J

  |  26 Jan 2021 11:11 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டாக்டர் என இரண்டு படங்களில் நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படமான வாழ் என்ற படத்தில் பிரபல இசையமைப்பாளர் பாடி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, கனா என இரண்டு படங்களை தயாரித்தவர் ஆவார். மேலும் கனா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ் என்ற படத்தை அருவி என்ற வெற்றி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே டீசர் மற்றும் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆன நிலையில் இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வாழ் படத்தின் இரண்டாவது பாடலை பிரபல இசையமைப்பாளருமான தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் என்பதும், இந்த படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் தேவா பாடிய பாடலை கேட்க ஆர்வமாக இருக்கிறோம் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News