Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய படத்தின் புதிய தோற்றத்தில் ஆர்யா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஆர்யா புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது வித்தியாசமான தோற்றம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

புதிய படத்தின் புதிய தோற்றத்தில் ஆர்யா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2023 6:00 AM GMT

ஆர்யா வித்யாசமான கதை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராசபட்டினம் , அவன் இவன், இரண்டாம் உலகம், மகா முனி , சார் பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் அவரது திறமையான நடிப்பை வெளிப்படுத்திவதாக அமைந்தன . இந்த நிலையில் தற்போது 'சைந்தவ்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . நீண்ட தலை முடி, ஸ்டைலான தோற்றத்தில் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .


இது வலைதளத்தில் வைரல் ஆகிறது. இந்த படத்தில் வெங்கடேஷ், நவாசுதீன், சித்திக்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆண்ட்ரியா, சாரா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சைலேஷ் கொலானு டைரக்ட் செய்கிறார். தமிழ், தெலுங்கு,இந்தி,கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News