Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசனின் அசத்தல் தோற்றம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் கமலஹாசனின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமலஹாசனின் அசத்தல் தோற்றம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
X

KarthigaBy : Karthiga

  |  17 Aug 2023 11:45 AM IST

கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சங்கர் இயக்குகிறார். இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் தாத்தா சேனாதிபதி கதாபாத்திரத்தின் தோற்றத்தை சுதந்திர தினத்தை ஒட்டி பட குழுவினர் நேற்று வெளியிட்டனர். அதில் கமலஹாசன் முதியவர் தோற்றத்தில் இருந்தார். இந்த தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இதனை பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்த தோற்றத்துக்காக கமலஹாசன் பலமணி நேரம் மேக்கப் போட்டு நடித்ததாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் ,ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தாரர்த் உள்ளிடட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் படபிடிப்பு நடந்துள்ளது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளை பார்த்த கமலஹாசன் மகிழ்ந்து இயக்குனர் சங்கர் பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News