Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவ சிகிச்சைக்காக ஒரு ஆண்டு சினிமாவை விட்டு விலக முடிவில் இருக்கும் நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை சமந்தா தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக ஒரு ஆண்டு வரை சினிமாவை விட்டு விலகி இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக ஒரு ஆண்டு சினிமாவை விட்டு விலக முடிவில் இருக்கும் நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  6 July 2023 6:15 AM GMT

நடிகை சமந்தா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஏற்கனவே சில படங்களை நடிப்பதற்காக வாங்கி அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. தற்போது சித்தாடல் வெப் தொடர் மற்றும் தெலுங்கில் குஷி படம் ஆகியவை கைவசம் உள்ளன. இவற்றில் நடித்து முடித்துவிட்டு ஓய்வெடுக்க போகிறாராம். தனது உடல்நிலை காரணமாகவே இந்த ஓய்வு என்று கூறப்படுகிறது.


ஏற்கனவே மயோசிடிஸ் என்ற தசை அழற்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்தார். கொஞ்சம் உடல்நிலை தேறிய நிலையில் தான் சில படங்களில் மீண்டும் நடித்தார். ஆனாலும் முழு அளவில் அவர் குணமாகவில்லை. எனவே ஒரு வருடம் சினிமாவில் விட்டு தற்காலிகமாக விலகி இருந்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் . தொடர்ந்து சிகிச்சை எடுத்து பூரண குணமான பிறகு மீண்டும் நடிக்க வருவார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.


SOURCE:DAILY THANTH

Next Story
கதிர் தொகுப்பு
Trending News