பாலாஜி பற்றி சுஜியிடம் கேட்ட ரசிகர்கள், கடுப்பான சுசித்ரா - என்னவாக இருக்கும்.?
பாலாஜி பற்றி சுஜியிடம் கேட்ட ரசிகர்கள், கடுப்பான சுசித்ரா - என்னவாக இருக்கும்.?
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியான சுஜித்ராவிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு கோபம் அடைந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் கமலிடம் வீட்டுக்குள் இருப்பவர்களை பற்றி பகிர்ந்த விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. சரியாக தான் கூறுகிறார் என்பது போல் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அதை பற்றி ஒரு சில பதிவுகளை அவரது இன்ஸ்ட்டாகிராமில் பதிவில் பதிவிட்டார்.அந்த பதிவில் ரசிகர்கள் பலர் பாலாஜி பற்றிய கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த சுஜி பொறுமையாக பதில் அளித்துள்ளார்.
அப்படி ரசிகர் ஒருவர் பாலாஜி வெளியிலிருந்து பார்ப்பதற்கும் வீட்டிற்கு உள்ளே பார்ப்பதர்க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு அவர் அப்படியே தான் இருக்கிறார். மிகவும் கூலான ஒரு மனிதர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒரு ரசிகர் உங்களுக்கு பாலாஜி ஒரு நல்ல நண்பரா அல்லது சகோதரரா என்று கேட்பதற்கு. உங்களுடைய எல்லா விளக்கத்திற்கும் மேலானது அது. எதற்கு இந்த தேவையில்லாத கேள்விகள் என்று அவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஒரு ரசிகரும் பாலாஜி போல் உங்களுக்கு ஒரு நல்ல சகோதரர் கிடைத்திருக்கிறார் என்று கூறியதற்கு சுசித்ரா சகோதரரா அய்யோ வேண்டவே வேண்டாம் என்று கூறியுள்ளார்.தற்போது இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.