#BigBoss4 ஆரிக்காக நட்பு ரீதியாக வெளியான பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்! வெளியான பாடல் உற்சாகத்தில் ரசிகர்கள்..!
#BigBoss4 ஆரிக்காக நட்பு ரீதியாக வெளியான பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்! வெளியான பாடல் உற்சாகத்தில் ரசிகர்கள்..!


தனியொரு ஆளாய் சென்றாய் அங்கே, தனக்கொரு பேரை வென்றாய் இங்கே.. எனத் தொடங்கும் அந்தப் பாடல் 'நேர்மை' என்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி… நீ வருவாய் வாகைசூடி என்ற ஹைலட்டோடு இருக்கிறது. மேலும் தனி ஒருவனாய், தன்னம்பிக்கை மிக்கவனாய், தன்னிலை மாறாதவனாய் என ஆரியின் பல குணங்களையும் இந்தப் பாடல் பிரதிபலித்து இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 4-ஆவது சீசன் தற்போது 100 ஆவது நாளை கடந்து உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் 12 பேர் வெளியேறி உள்ளனர். தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, கேபி, சோம், ரம்யா ஆகிய 6 பேர் வீட்டில் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் ஆரிக்குத்தான் என பல ரசிர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இத்தருணத்தில் ஆரிக்காக அவரது நண்பர்கள் ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு இருப்பது மேலும் ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.