நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள் !
கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று (அக்டோபர் 29) மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி கன்னட நடிகர்கள் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பெங்களூருவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பெங்களூருவில அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாகவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் மறைந்த செய்தியை கேட்டு ஆயிக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன்பாக குவிந்துவிட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டனர். இதன் பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக கன்டீரரா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே வெளிமாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் பெங்களூருவை நோக்கி வாகனங்களில் படையெடுக்க தொடங்கினர். இதனால் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy: ANI