அஜித் அறிக்கை ஏற்று போஸ்டர் அடித்து ரியாக்சன் செய்த ரசிகர்கள்.!
அஜித் அறிக்கை ஏற்று போஸ்டர் அடித்து ரியாக்சன் செய்த ரசிகர்கள்.!
By : Amritha J
வலிமை படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு தல அஜித் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை ஏற்று அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளனர். அந்தவகையில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. பல நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், வலிமை படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. ஆனால் அஜித் ரசிகர்கள் இப்படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரிடமும் படம் குறித்து அப்டேட் கேட்டும் பதிலளிக்காமல் இருந்தனர்.
அதன்படி வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வராததினால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரிடம் வலிமை அப்டேட் கேட்டு வரும் அஜித் ரசிகர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் வலிமை அப்டேட்டை கேட்கத் தொடங்கிவிட்டனர். இதனை அறிந்த அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது என கூறியிருந்தார்.
இந்த அறிவுரையை அடுத்து அஜித் ரசிகர்கள் பலர் இனிமேல் யாரிடமும் அப்டேட் கேட்க மாட்டோம் என்று சமூக வலைதளங்கள் மூலம் உறுதி செய்தனர். இந்த நிலையில் மதுரை நகரில் உள்ள அஜித் ரசிகர்கள் இதனையே ஒரு போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளனர். உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவோம் என்றும் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்றும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.