சிம்பு பட நடிகைக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த ரசிகர்கள்!
சிம்பு பட நடிகைக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த ரசிகர்கள்!
By : Amritha J
நடிகர் சிம்பு தற்போது நடித்து முடித்து பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு தியேட்டரில் வெளியான படம் ஈஸ்வரன். இந்த படத்தின் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இதனை அடுத்து ஜெயம் ரவியின் 'பூமி' படத்திலும் நிதி அகர்வால் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களிலும் யதார்த்தமாக நடித்து, ரசிகர்களின் மனதை வென்ற நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி தீபாராதனை காண்பித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.மேலும் குஷ்புவுக்கு அடுத்து நிதி அகர்வாலுக்கு தான் கோவில் கட்டி உள்ளோம் என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறிக் கொண்ட தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தற்போது கோவில் கட்டி தீபாராதனை காட்டிய புகைப்படம் வைரல் ஆன நிலையில் இதற்கு ரசிகர்கள் நல்ல கமெண்ட்களையும், நெட்டிசன்கள் நெகட்டிவ் கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.