டெல்லியில் போராடுபவர்கள் நாட்டை பிளவுப்படுத்தும் பயங்கரவாதிகள்.. பாப் பாடகிக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரணாவத்.!
டெல்லியில் போராடுபவர்கள் நாட்டை பிளவுப்படுத்தும் பயங்கரவாதிகள்.. பாப் பாடகிக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரணாவத்.!

டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களை தவிர மற்ற மாநில விவசாயிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவசாயிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை விட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று பாஜக குற்றம்சாட்டியது.
விவசாயிகள் போர்வையில் கடந்த 26ம் தேதி குடியரசுத் தினத்தன்று உச்சகட்ட வன்முறைகளை நிகழ்த்தினர். இதனை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பானது. ஆனால் இதனை புரிந்து கொள்ளாமல் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாப்பாடகிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல. அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிடும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போன்று பிளவுபட்ட நாட்டை சீனா கைப்பற்ற முயற்சிக்கும் என குறிப்பிட்டுள்ளார். பாலிவுட், ஹாலிவுட் இடையே ட்விட்டரில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.