வெற்றி வாய்பான தொகுதியை தேடுங்க.. நானும் போட்டியிடனும்.. ஆதரவாளரிடம் கேட்ட நடிகர் விஷால்.!
வெற்றி வாய்பான தொகுதியை தேடுங்க.. நானும் போட்டியிடனும்.. ஆதரவாளரிடம் கேட்ட நடிகர் விஷால்.!

தமிழ் பிரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான விஷால் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன. கடந்த 2 முறையும் ஆட்சியை கோட்டவிட்ட திமுக இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் குட்டிக்கரணம் அடித்து கொண்டு வருகிறது. ஆறு மாதத்திற்கு முன்னரே தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டது.
அதிமுகவும் தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகின்றது. இது தவிர நடிகர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, ரஜினி மக்கள் மன்றம் உள்ளிட்ட கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயுத்தமாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விஷால் அவர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடைய வட்டாரத்திலும், தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியை அடையாளம் காணும் பணியில் அவரது அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் தேர்தலுக்கு எத்தனை கட்சியை மக்கள் பார்க்க போகிறார்களோ என்று தெரியவில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.