பாகுபலி பட நாயகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பாகுபலி பட நாயகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
By : Amritha J
தமிழ் மட்டுமில்லாமல் பழமொழிகள் எடுக்கப்பட்ட படம் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இப்படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது "சலார்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் படப்பிடிப்பு நடைபெறும் போது தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சலார் படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வேன் ஒன்றில் திரும்பி சென்று கொண்டிருந்த போது இவர்கள் சென்ற வேன், திடீரென லாரி மீது மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படக்குழுவினர் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படம் மும்பையில் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது என்பதும் அதேபோல் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது, சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் இடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.