நடிகர் ஜெய்யின் "பிரேக்கிங் நியூஸ்" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!
நடிகர் ஜெய்யின் "பிரேக்கிங் நியூஸ்" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் பகவதி என்ற படத்தில் தளபதி விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு எங்கேயும் எப்போதும், அட்லி இயக்கிய ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது வளர்ந்து வரும் நடிகரான ஜெய் பிரேக்கிங் நியூஸ் உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பும் வெளியாகி இருந்தது.ஆண்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக பானு ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் கில், ராகுல் தேவ் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு திரையில் வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் அவர்களது கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும், வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.