Kathir News
Begin typing your search above and press return to search.

'டாடா' வெற்றியை தொடர்ந்து கவின் நடிக்கும் புதிய திரைப்படம்!

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு கவினின் கதாநாயகன் அந்தஸ்து உயர்ந்துள்ளது. அவர் நடிக்கும் புதிய படத்தின் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாடா வெற்றியை தொடர்ந்து கவின்  நடிக்கும் புதிய திரைப்படம்!

KarthigaBy : Karthiga

  |  14 Sep 2023 5:15 PM GMT

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஸ்டார்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. இதில் இந்தி தெலுங்கு திரையுலகில் இருந்து இரண்டு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள். பிரபல மலையாள நடிகர் ஒருவரும் நடிக்கிறார். இந்த படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி பிரபலமான இளன் டைரக்டர் செய்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்துள்ளது. 40 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளதாகவும் இறுதி கட்டப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாகவும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர் .


அறிமுக பாடல் காட்சியை பிரம்மாண்ட அரங்க அமைத்து படமாக்கியுள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் அவரது பாடல்கள் கவரும் வகையில் இருக்கும் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தை பி.வி.எஸ்.என் பிரசாத் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஒளிப்பதிவு எழிலரசு. இந்த படத்தின் முன்னோட்டம் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News