Kathir News
Begin typing your search above and press return to search.

ஷாருக்கான் புதிய பட இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஷாருக்கான் படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஷாருக்கான் புதிய பட இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  28 April 2022 10:45 AM GMT

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஷாருக்கான் படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.




நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி எனும் புதிய படத்தில் நடிக்கிறார் ஷாரூக்கான். ராஜ்குமார் ஹிரானி ஏற்கனவே வெற்றி படங்களை கொடுத்தவர் இந்த படத்தில் டாப்சி கதாநாயகியாக நடிக்கிறார்.





வருகிற மே மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் முதல் ஷாருக்கான் படம் இதுவே எனவும் அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகும் சூரரைப்போற்று ஹிந்தி மறு பதிப்பிற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News