Kathir News
Begin typing your search above and press return to search.

வாரிசு படத்திற்கு உதயநிதி கைவிரித்துவிட்டாரா - அவர் கூறியது என்ன?

வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கு திரையுலகம் முட்டுக்கட்டை போடுவது குறித்து உதயநிதியிடம் கேட்கப்பட்டதற்கு அதற்க்கு தெலுங்கு திரையுலகம் எடுக்க முடிவு என கருது தெரிவித்துள்ளார்.

வாரிசு படத்திற்கு உதயநிதி கைவிரித்துவிட்டாரா - அவர் கூறியது என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2022 12:49 PM GMT

வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கு திரையுலகம் முட்டுக்கட்டை போடுவது குறித்து உதயநிதியிடம் கேட்கப்பட்டதற்கு அதற்க்கு தெலுங்கு திரையுலகம் எடுக்க முடிவு என கருது தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகும் நேரத்தில் தெலுங்கில் மகர சங்கராந்தியை ஒட்டி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக தமிழ் திரையுலகத்தினர் குரல் எழுப்பி வரும் நிலையில் சென்னையில் 'கட்டா குஸ்தி' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதியுடன் வாரிசு பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா அல்லது அங்கு ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, 'தெலுங்கு திரையுலகில் போய் நான் எப்படி பேச முடியும் இதில் தான் தலையிட முடியாது' என சூசகமாக சொல்லிவிட்டு சென்றார். விஜய் ரசிகர்கள் மத்தியில் இது தொடர்பான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News