Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களுக்காக உதவிய குணம்.. ஆசியாவிலேயே மிகச்சிறந்த பிரபலமாக சோனு சூட் தேர்வு.!

மக்களுக்காக உதவிய குணம்.. ஆசியாவிலேயே மிகச்சிறந்த பிரபலமாக சோனு சூட் தேர்வு.!

மக்களுக்காக உதவிய குணம்.. ஆசியாவிலேயே மிகச்சிறந்த பிரபலமாக சோனு சூட் தேர்வு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2020 9:28 PM IST

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் பலரும் தங்களது ஊர்களுக்கு செல்லத்துவங்கினர். இது போன்ற சமயத்தில் நடிகர் சோனு சூட் தனது சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டு உதவி செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் தமிழ் படத்தில் சோனு சூட் முதன் முதலாக நடித்தார். அந்த படம் அவர் அறிமுகமும் கூட. அதனால்தான் என்னவோ விஜயகாந்த் போலவே நடிகர் சோனு சூட்டிடம் இரக்க குணம் மறைந்துள்ளது. கொரோனா காலத்தில் அது வெளிப்பட்டதை அனைவரும் அறிவோம். கொரோனா சமயத்தில் பல கோடி ரூபாய் பணத்தை ஏழை மக்களுக்காக கொடுத்து உதவினார். சொந்த ஊர் செல்வதற்கு பேருந்து ஏற்பாடுகள், மற்றும் டவர் கிடைக்காத மலை கிராமத்தினருக்கு டவர் அமைத்து கொடுத்தது என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மக்களுக்கு சோனு சூட் தன்னுடைய பெயரில் உள்ளது மற்றும் மனைவியின் பெயரில் உள்ளதை இரண்டும் சேர்த்து தனியார் வங்கியில் அடகு வைத்து அதில் வந்த பணத்தில் உதவிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது 10 கோடி ரூபாய் அளவிற்கு அடமானம் வைத்த பணத்தில் ஏழை எளிய மக்களுக்காக உதவி செய்துள்ளார். இவரது இரக்க குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகி நவம்பர் 24ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணி கன்ட்ரோல் என்ற இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஆசியாவின் மிகச்சிறந்த சினிமா ஆளுமைகள் பட்டியலில் சோனு சூட் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வாரப்பத்திரிகை 50 ஆசிய சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் சோனு சூட்டுக்கு முதலிடம் கொடுத்துள்ளது.

கொரோனா சமயத்தில் மக்களுக்காக உதவிய குணத்திற்காக அவர் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நடிகர்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவே உள்ளனர். அதற்கு உதாரணமாக சோனு சூட்டும் சொல்லலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News