Kathir News
Begin typing your search above and press return to search.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன்.!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன்.!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2021 12:45 AM IST

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா திருவள்ளூர் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தற்கொலையில் சித்ரா கணவர் ஹேம்நாத்திற்கு தொடர்பு உள்ளதாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஹேம்நாத் ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த ஜாமீனுக்கு சித்ராவின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கொண்ட சித்ரா மரணம் இன்று வரை அனைவரிடத்திலும் ஒருவிதமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News