நடிகை தமன்னாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு! காரணம் தெரியுமா?
நடிகை தமன்னாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு! காரணம் தெரியுமா?
By : Amritha J
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அந்தவகையில் பல படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் விளையாட்டினால் பல இளைஞர்களின் வாழ்க்கை சுக்குநூறாகவும்,லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியும் வந்தது.
எனவே ரம்மி விளையாட்டிற்கு கேரளா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கப்பட்டாலும் பல்வேறு மாநிலங்களில் இந்த விளையாட்டை பல இளைஞர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த ரம்மி விளையாட்டை முழுவதுமாக தடுக்க கேரள உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இந்த விளையாட்டிற்கு தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை பாலி வடக்கன் என்பவர் தாக்கல் செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இந்த விளையாட்டின் தூதர்களாக இருக்கும் மலையாள நடிகர் அஜூ, தமன்னா,கிரிக்கெட் வீரர் விராத் கோலி என இன்னும் பலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.