விவேக் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயர் அரசிடம் கோரிக்கை
Vivek wife rquest to tamilnadu goverment

By : Mohan Raj
மறைந்த நடிகர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்து வந்த தெருவுக்கு சூட்டவேண்டும் முதல்வரிடம் அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சின்னக் கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட விவேக் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார், நடிப்பில் அவர் நகைச்சுவை மட்டுமல்லாது கருத்துக்களையும் கூறிவந்தார். அதுமட்டுமின்றி பொதுவாழ்வில் மரக்கன்று நடுவது அவசியத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தி வந்தார் அவரால் நடப்பட்ட மரக்கன்றுகள் ஏராளம்.
இந்த நிலையில் இந்த சமுதாயத்திற்கு தன்னாலான பங்களிப்பை தந்துள்ள தனது கணவர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்து வந்த தெருவுக்கு சூட்ட வேண்டுமென அவரது மனைவி அருட்செல்வி நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார் அரசும் அதனை ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் தற்போது தெரிவித்துள்ளார்.
