இந்த வாரம் ஆரி தான் வெளியேற போகிறார் என்று கணித்த ஹவுஸ்மேட்!
இந்த வாரம் ஆரி தான் வெளியேற போகிறார் என்று கணித்த ஹவுஸ்மேட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அவர்களது பங்களிப்பை காட்டி விளையாடி வருகின்றனர். அந்தவகையில் இந்த வாரம் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன.

எனவே நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்த பின்னர் நள்ளிரவில் அனிதா மற்றும் ரம்யா பேசிக்கொள்கின்றனர். அப்போது இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று நீ நினைக்கின்றாய் என அனிதா கேட்டபோது அதற்கு ரம்யா, 'ஆரி' வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
ஏனென்றால் வெளியேறும் போட்டியாளரை குஷிப்படுத்தி அனுப்புவார்கள் என்றும் இதேபோல்தான் முதல் வாரம் ரேகா வெளியேறுவதற்கு முந்தைய நாள் குஷிப்படுத்தினார்கள் என்றும் அதே போல் இன்றும் ஆரிக்கு கிப்ட் வவுச்சம் எல்லாம் கொடுத்து குஷிப்படுத்தியுள்ளதால் அவர் வெளியே போக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

ஆனால் அனிதா அதனை ஒப்புக்கொள்ளவில்லை. கிறிஸ்மஸ் நிகழ்ச்சிக்காக விளம்பரதாரராக வந்ததால் அந்த கிப்ட் வவுச்சர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ஆரிக்கு வழங்கப்பட்டதாகவும், அதற்கும் எவிக்சனுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அனிதா கூறியுள்ளார். ஆரி தான் வெளியேறுவார் என்று ரம்யா கணித்த உரையாடலின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
null#anitha #BiggBoss4Tamil #RamyaPandian pic.twitter.com/BAbJj8ZYRZ
— JD (@mastervijay2020) December 26, 2020