Kathir News
Begin typing your search above and press return to search.

படம் ரிசல்ட் எப்படி இருந்தா என்ன? விஜய்யுடன் நடித்ததே போதும் - ஒரே போடாக போட்ட ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார்.

படம் ரிசல்ட் எப்படி இருந்தா என்ன? விஜய்யுடன் நடித்ததே போதும் - ஒரே போடாக போட்ட ராஷ்மிகா மந்தனா

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:20 PM GMT

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி உடன் தமிழில் சுல்தான் படத்திற்கு பிறகு தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் இரண்டு பாடல்களில் விஜயுடன் நடனமாடும் ஒரு கதாநாயகியாக மட்டுமே நடித்திருக்கிறார் எனவும் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இது பற்றி ராஷ்மிகா மந்தனா கூறுகையில் இரண்டு பாடல்களைத் தவிர பெரிதாக எனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது வாரிசு படத்தின் கதையை கேட்ட போதே எனக்கு தெரியும். அது தெரிந்தும் விஜய் தான் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம். ஒரு ரசிகையாக விஜய்யை நீண்ட காலமாக நான் ரசித்து வந்திருக்கிறேன்.

அதனால் எப்படியாவது அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. விஜய்க்கு ஜோடியாக எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் வாரிசு படத்தை விடுவதற்கு எனக்கு மனசு வரவில்லை ஆதலால் ஏற்றுக் கொண்டேன். நான் ஒவ்வொரு படத்தின் நடிக்கும் போதும் அந்த படத்தின் ஹீரோக்களிடமிருந்து புதிய விஷயங்கள் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். வாரிசு படத்தில் அந்த அடிப்படையில் தான் நான் நடித்தேன். விஜயுடன் நடித்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கு கூடுதல் முக்கியத்துவம் இல்லை என்றாலும் என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News