உங்களை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - கமலிடம் இளையராஜா ஏன் இப்படி கூறினார்?
'உங்கள் மலர்ந்த முகம் காண மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது' என கமலுக்கு இளையராஜா வலது தெரிவித்துள்ளார்.

'உங்கள் மலர்ந்த முகம் காண மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது' என கமலுக்கு இளையராஜா வலது தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'விக்ரம்' திரைப்படம் 400 கோடி அளவிற்கு வசூலை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளது. கமலஹாசன் நடித்த திரைப்படங்களை வரலாற்றில் இதுவரை இவ்வளவு வசூல் சாதனையை எந்த படமும் நிகழ்த்தியது இல்லை இதன் காரணமாக கமலஹாசன் தற்போது விழாக்களிலும், படத்தின் வெற்றி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார் இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியாக தென்படுகிறார்.
இந்த சூழலில் இது குறித்து இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பதிவில், 'வெற்றிகள் தொடரட்டும், சகோதரரே மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காண சந்தோஷமாக இருக்கிறது' என ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதில் தரும் விதமாக கமலஹாசன், 'நம் அன்பை எப்போதாவது தான் நாம் பரிமாறிக்கொள்ளுவோம்' என்று தெரிவித்துள்ளார்.