பிக்பாஸில் எவிக்சனின் போது மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்: மௌனமாக கூறிய ஷிவானி.!
பிக்பாஸில் எவிக்சனின் போது மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்: மௌனமாக கூறிய ஷிவானி.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் டேஞ்சர்ஜோனில் கடைசியாக உள்ள அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஆகிய மூன்று பேரில் ஒருவர் இன்று வெளியேற போகும் நிலையில் வெளியேறும் போட்டியாளரை அறிவிக்கும் கடைசி நிமிடத்திற்கு முன்னதாக மூவரிடமும் அவர்களுடைய எண்ணங்களை கமல்ஹசன் கேட்கிறார்.அப்போது சனம் கூறியபோது, இருந்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அதற்காகத்தான் நான் வந்திருக்கின்றேன் என்று கூறினார்.
அனிதா கூறும்போது போனாலும் திருப்தியுடன் தான் இருப்பேன் இருந்தாலும் இனிமேல் நல்லபடியாக விளையாடுவேன் என்று கூறினார். ஷிவானி கூறியபோது மக்களுடைய தீர்ப்பு என்பதால் நான் அதை மதித்து ஏற்றுக் கொள்வேன் என்று சோகமாக கூறுகிறார்.
இதனை அடுத்து வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் கூறுவதோடு இன்றைய மூன்றாவது புரமோ முடிவடைகிறது. இன்றைய நிகழ்ச்சியில் சனம் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்றும் அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.