புதிய ஸ்டூடியோவில் பிரபல நடிகர் படத்திற்கு முதன்முறையாக இசையமைத்த இளையராஜா.!
புதிய ஸ்டூடியோவில் பிரபல நடிகர் படத்திற்கு முதன்முறையாக இசையமைத்த இளையராஜா.!
By : Kathir Webdesk
கருத்து வேறுபாடு காரணமாக பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறிய இசைஞானி இளையராஜா தனக்கென்று புதியதாக ஒரு ஸ்டூடியோவை வடிவமைத்து அதில் முதன் முறையாக நடிகர் சூரி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா பல நூறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டூடியோ உள்ளே இளையராஜவை அனுமதிக்கவில்லை. இதனிடையே உயர்நீதிமன்றம் வரை சென்று தனது பொருட்களை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை கோடம்பாகத்தில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கி அதனை ஸ்டூடியோவாக மாற்றியுள்ளார். புதிய ஸ்டூடியோவில் முதன் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கின்ற படத்திற்கான பாடல் பதிவு நடைபெற்றது. இதனை இளையராஜா தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, ‘‘பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறியதில எந்த விதமான வருத்தமோ அல்லது கவலையோ இல்லை. சாலையில் நடந்து செல்கிறோம் அப்போது நம் மீது காகம் எச்சம் விழுந்தால் யாராவது வருத்தப்படுவார்களோ சொல்லுங்கள் என கூறினார். இளையராஜா புதிய ஸ்டூடியோ திறந்ததற்கு ரசிகர்கள் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.