Kathir News
Begin typing your search above and press return to search.

நான் உங்கள் அடிமை இல்லை - கோல்டு திரைப்படத்தின் விமர்சனத்தால் மனம் நொந்த அல்போன்ஸ் புத்திரன்

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.

நான் உங்கள் அடிமை இல்லை - கோல்டு திரைப்படத்தின் விமர்சனத்தால் மனம் நொந்த அல்போன்ஸ் புத்திரன்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:26 PM GMT

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கடந்த ஏழு வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார். பிரித்திவிராஜ் நயன்தாரா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோல்ட் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அல்போன்ஸ் புத்ரன் படம் எப்போது வெளியாகும் என ஏழு வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தையே தந்தது. அதனால் இந்த படத்தைப் பற்றி கிண்டல் அடிக்கும் விதமாக தொடர்ந்து கருத்துக்களை அவருடைய ரசிகர்களே வெளியிட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் ரசிகர்களின் விமர்சனத்திற்கு அமைதியாக பொறுமையாக பதில் சொல்லி வந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், நெட்டிசன்களின் கிண்டல் தொடர்ந்து அதிகமாகி வந்ததால் நான் உங்கள் அடிமை இல்லை என்னை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு நான் தரவில்லை என்று கோபமாகவும் காட்டமாகவும் பதில் அளித்துவிட்டார்.

உங்களுக்கு திருப்தி படுத்தவில்லை என்ற காரணத்திற்காக நீங்கள் என்னைப் பற்றியும் என்னுடைய கோல்டு திரைப்படத்தை பற்றியும் கிண்டல் அடிப்பது உங்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. அதனால் நான் தற்போது இணையதளத்தில் என் முகத்தை காட்டாமல் என் எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை, அது மட்டுமல்ல பொதுவெளியில் என்னை கிண்டல் அடிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் எந்த உரிமையும் நான் உங்களுக்கு கொடுக்கவில்லை.

உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடைய படங்களை பாருங்கள் .. மேலும் என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வந்து உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள். இதுபோல் செய்து வந்தால் நான் இணையதளத்தை விட்டு மறைந்து விடுவேன் முன்பு இருந்ததைப் போல நான் இப்பொழுது இல்லை. நான் எனக்கும், என்னுடைய குடும்பத்தாருக்கும் நான் கீழே விழும்போதெல்லாம் என்னை தாங்கி பிடித்து உறுதுணையாக இருப்பவர்களுக்கும் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

அதேசமயம் யார் தங்களுடைய முகத்தில் சிரிப்பை நான் கீழே விழும் போது காட்டுகிறார்களோ அவர்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். கீழே விழ வேண்டும் என்று யாரும் திட்டமிட்டு விழுவதில்லை இயற்கையாகவே அது நடக்கிறது அதேபோன்று இயற்கையே என்னை பாதுகாத்து எனக்கு ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News