பொன்னியின் செல்வன் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு!
By : Amritha J
முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் பிரபல முன்னணி தமிழ் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் கார்த்திக்கின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் 'பொன்னியின் செல்வன்' படக்குழுவில் விக்ரம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் ஆகியோரும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மார்ச் முடிவடையும், இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பு விரைவில் முடிந்து விட்டாலும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.