Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு..!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு..!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு..!
X

Amritha JBy : Amritha J

  |  6 Feb 2021 6:56 PM GMT

நடிகர் தனுஷ் தமிழ் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் தற்போது களம் இறங்கி இருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹாலிவுட்டில் அவேன்ஜர்ஸ் இயக்குநர்கள் இயக்கவுள்ள "தி கிரே மேன்" படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே அறிந்ததே. தற்போது ஷூட்டிங் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

எனவே பிப்ரவரி 8-ஆம் தேதி கார்த்திக்நரேன் இயக்கும் D43 படத்தின் முதல் படப்பிடிப்பை முடிக்கும் தனுஷ், அதை தொடர்ந்து 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு அமெரிக்காவில் 'தி கிரே மேன்' பட ஷூட்டிங் நடப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News