வலிமை படத்தின் 'இன்ட்ரோ சாங்' குறித்த முக்கிய தகவல்..!
வலிமை படத்தின் 'இன்ட்ரோ சாங்' குறித்த முக்கிய தகவல்..!

தல அஜித் போனி கபூர் இயக்கத்தில், இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் நடித்து வரும் படம் வலிமை.கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது. இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பலர் நடித்துள்ளனர். காமெடி நடிகராக யோகிபாபு நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் இடம்பெற்ற அஜித்தின் இன்ட்ரோ சாங் குறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி வலிமை படத்திற்காக நடிகர் அஜித்தின் இன்ட்ரோ சாங் தயாராகிவிட்டதாக யுவன்சங்கர்ராஜா அறிவிப்பு செய்துள்ளார். இது ஒரு சரியான மாஸ் சாங் என கூறியிருப்பதை அடுத்து இந்த மாஸ் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Valimai intro song will be a mass folk number and a real treat for the fans. Festival Drummers from Orrisa have been roped in for the song : Music Director #YuvanShankarRaja 🎆
— AJITHKUMAR ARMY™ (@AjithKumarArmy) February 10, 2021
#Thala #Ajith