இந்த சூழ்நிலையில் ‘வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம்.. அஜித் எடுத்த திடீர் முடிவு.!
இந்த சூழ்நிலையில் ‘வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம்.. அஜித் எடுத்த திடீர் முடிவு.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பிரபல நடிகர்களின் படங்கள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நடிகர்களின் படம் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் திரையிடப்படவில்லை.
ஏன் என்றால் பெரிய பட்ஜெட் படத்தை தற்போதைய சூழலில் வெளியிட்டால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என தயாரிப்பாளர்கள் உணர்ந்துள்ளனர்.
முழு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பின்னரே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு சமீபத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போதைய சூழலில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் கொரோனா வேகமாக பரவும் சூழலும் உள்ளது என கூறியது.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் முடிவுக்கு வரும் வரை ‘வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் நடிகர் அஜித் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் பொங்கலுக்கு வெளியாவதால் விஜய், சிம்பு உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திரையரங்கில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பொதுமக்கள் தரப்பிலும் சரி மருத்துவர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவல் சரியாகும்வரை தனது ‘வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் நடிகர் அஜித் உறுதியாக கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
என்றும் மக்கள் மீது அன்பு கொண்டவராக நடிகர் அஜித் விளங்கி வருகிறார் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.