விஜய்க்கு வருமானவரித்துறை விதித்த அபராதம் - விவகாரத்தின் பின்னணி என்ன?
நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமானவரித்துறை உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமானவரித்துறை உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2016-17ஆம் ஆண்டு நிதி ஆண்டிற்கான வருமானவை கணக்கை தாக்கல் செய்தபோது அதில் அந்த ஆண்டுக்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்து இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு 1.50 கோடி கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி வருமானவரித்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால் 2019 ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பெடுத்திருக்க வேண்டும் காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பு மனுவில் கூறியிருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமானவரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை தெரிவித்து மனுவுக்கு வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.