மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் 'கேன்ஸ்' விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு மரியாதையை பெறப்போகும் இந்திய நட்சத்திரங்கள்
பிரான்சில் நடைபெறும் 'கேன்ஸ்' உலகத் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது.

பிரான்சில் நடைபெறும் 'கேன்ஸ்' உலகத் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 'கேன்ஸ்' சர்வதேச திரைப்பட விழா உலகப்புகழ் பெற்றதாகும், இதில் திரைப்படங்கள் காட்சி இடம் பெறுவதே ஒவ்வொரு படைப்பாளியின் கனவாக இருக்கும். இந்நிலையில் 75'ஆவது கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது இந்த விழாவில் கலந்து கொள்ள உலகின் பல திரைப்பட கலைஞர்கள் பல நாடுகளிலிருந்து வருகை புரிவார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடகர் ஏகான், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, திரிபாதி, மாதவன், சேகர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் இந்த குழு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இருக்கிறது. இந்த குழுவிற்கு ராஜா மரியாதையாக சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.