இந்தியா என்பதை மாற்றிவிட்டு 'பாரதம்' என பெயர் சூட்ட வேண்டும்.. நடிகை கங்கனா ரனாவத்.!
நமது நாட்டின் பெயரை இந்தியா என்பதை மாற்றிவிட்டு மீண்டும் பழைய மாதிரி பாரத் என்றே மாற்ற வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
By : Thangavelu
நமது நாட்டின் பெயரை இந்தியா என்பதை மாற்றிவிட்டு மீண்டும் பழைய மாதிரி பாரத் என்றே மாற்ற வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தை கூறியுள்ளார். அதில், இந்தியா என்பது அடிமைப் பெயராக உள்ளது. இதனை மாற்றிவிட்டு மீண்டும் நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை சூட்ட வேண்டும்.
நமது நாட்டின் பண்ணைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றி உள்ளது. நமது நாகரீகத்தின் ஆன்மாக திகழ முடியும். எனவே அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா? இந்தியா என்பது சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ஆங்கிலேயர் நமக்கு இந்தியா என்ற பெயரை வைத்துள்ளனர். எனவே பழைய பெயரை மாற்றிவிட்டு பாரத் எனறு வைப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.