தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தை பார்த்துவிட்டு தாங்களும் பிரபலமாவதற்கு சிறுவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, ஜகாங்கீர்புரி பகுதியில் ஷிபு என்ற நபர் கத்தி குத்துடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3 சிறுவர்கள் சேர்ந்து ஷிபுவை கத்தியால் குத்தியுள்ளனர். இது பற்றிய சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், தாங்கள் புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படத்தை பார்த்தோம். அதில் வரும் கதாபாத்திரம் போன்று நாங்களும் உலக அளவில் பிரபலமாவதற்கு கொலை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்தோம். தற்போது அதனை வெளியிடுவதற்குள் நாங்கள் மாட்டிக்கிட்டோம் என கூறியுள்ளனர். சமுதாயத்தை சீர்த்திருத்தம் செய்வதற்கு திரைப்படங்கள் எடுக்காமல் கொலை, கொள்ளை, ரவுடித்தனம் போன்ற கதாபாத்திரங்களில் கதை அம்சத்துடன் படம் எடுத்தால் இது போன்று சிறுவர்கள் மனதில் தீய எண்ணங்கள் வெளிப்படும். எனவே சினிமாத்துறையினர் நல்ல கதாபாத்திரம் உடைய படங்களை எடுத்தால் வருங்கால சங்கதிகள் சரியான பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Source, Image Courtesy: Maalaimalar