'தளபதி 65' சிம்பு டிராப் செய்த படத்தின் கதையா - வெளிவந்த உண்மை.?
'தளபதி 65' சிம்பு டிராப் செய்த படத்தின் கதையா - வெளிவந்த உண்மை.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை இயக்க இருப்பது நெல்சன் என்று அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் நெல்சன், சிம்பு நடித்த 'வேட்டை மன்னன்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டும் நடைபெற்றதை அடுத்து அந்தப் படம் ஒருசில காரணங்களால் டிராப் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது தளபதி 65 திரைப்படத்தின் கதை 'வேட்டை மன்னன்' கதை தான் என்றும் விஜய்க்காக அந்தக் கதையில் ஒரு சில மாற்றங்களை நெல்சன் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இது குறித்த உறுதியான தகவல் இயக்குனரிடம் இருந்து வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.சிம்பு ட்ராப் செய்த படத்தின் கதையில் தான் தளபதி விஜய் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.