Kathir News
Begin typing your search above and press return to search.

ஆச்சார்யா படத்தில் காஜல் அகர்வால் நீக்கப்பட்டாரா உண்மை என்ன?

kajal agarwal role in Acharya movie

ஆச்சார்யா படத்தில் காஜல் அகர்வால் நீக்கப்பட்டாரா உண்மை என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  25 April 2022 10:00 AM GMT

காஜல் அகர்வால் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் 100% உண்மையாகியுள்ளது.





கொரடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆச்சாரியா', இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு சிறிது நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். பின் அவர் கர்ப்பமானதை உறுதிப்படுத்தியதன் பிறகு காஜல் அகர்வால் 'ஆச்சார்யா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.





இந்த நிலையில் விரைவில் வரவிருக்கும் 'ஆச்சார்யா' திரைப்படத்தில் காஜல் அகர்வால் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் குழப்பமாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்த 'ஆச்சார்யா' படம் புரமோஷன் நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் பெயரை படக்குழுவினர் உச்சரிக்காமல் விட்டுவிட்டனர். படத்தின் நாயகன் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் கூறவில்லை, எனவே இதனையடுத்து 'ஆச்சார்யா' படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவில்லை என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News