கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போவது உண்மையா?
கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு அவர் கூறிய விளக்கம்.
By : Karthiga
தமிழ் , தெலுங்கு, மலையாள பட உலக முன்னணிகதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷை சிலருடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதற்கு மறுப்பும் வெளியானது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் கீர்த்தி சுரேஷும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதை அடுத்து பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் வலைதளத்தில் தகவல் பரவி பரபரப்பானது .
இதற்கு கீர்த்தி சுரேஷ் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் .அதில் கீர்த்தி சுரேஷ்சும் பர்ஹானும் நண்பர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்த போது எங்களோடு பல தடவை வந்து இருக்கிறார் .
இது போன்ற தவறான தகவலை பரப்புவது எங்கள் குடும்பம் மட்டும் இன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும். எனது நண்பர்கள் விளக்கம் அளிக்கும்படி வற்புறுத்தியதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இது போன்ற ஆதாரமில்லாத தகவல்களை தயவு செய்து வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.