குஷி பார்ட்-2 உருவாக போகிறதா - கோலிவுட் வட்டாரங்களின் முழுமையான தகவல்.!
குஷி பார்ட்-2 உருவாக போகிறதா - கோலிவுட் வட்டாரங்களின் முழுமையான தகவல்.!
By : Amritha J
தளபதி விஜய் நடித்து முடித்து வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்தினை அடுத்து அடுத்ததாக எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் படத்தின் இயக்குநர் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் 65-வது படத்தில் நடிக்கிறார் எனவும் இத்திரைப்படம் தளபதி-65 என பெயர் குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விஜயின் 65வது படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது.மேலும்
தளபதி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க போகிறார் எனவும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இத்திரைப்படம் குஷி படத்தின் இரண்டாம் பாகம் என தகவல்கள் பரவி வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது, விஜய்-எஸ்.ஜே.சூர்யா இணைவதாக வரும் செய்திகள் முற்றிலும் ஒரு வதந்தியே என தகவல் கிடைத்துள்ளது.
விஜய்யின் அடுத்த திரைப்படத்தை நெல்சனே இயக்கவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.